கடலூர் கோமதி கொலை .. வதந்தி பரப்பியவர்கள் மீது பாய்ந்த வழக்கு.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோமதி என்ற பெண் தேர்தல் தகராறில் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய வட இந்தியர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தேர்தல் அன்று கோமதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். தாமரை சின்னத்திற்கு அந்தப் பெண் வாக்களித்ததால் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் காணொளி பரவியது. 

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சொந்த பிரச்சனை காரணமாக கோமதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது யார் என போலீசார் நடத்திய விசாரணையில் சிங்கா என்பவர் ரோஷன் என்ற பெயரில் தவறான கருத்தை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரபாகர் மற்றும் சண்முகம் ஓடிட்ட மூன்று பேர் மீது கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தவறான தகவல் பரப்புவோர் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tnpolice filed case against spread rumour in Cuddalore komathi murder


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->