பாமகவினர் அடித்த அடியில் கிளி ஜோசியர்களை விடுவித்த தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் உள்ளிட்ட இருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில், அவர்கள் இருவரையும் எச்சரித்து விடுவித்துள்ளனர்.

கடலூர் தொகுதியில்  போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குநர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிஜோதிடம் பார்த்தவரையும், அதே பகுதியில் மற்றும் ஒரு கிளி ஜோதிடம் பார்ப்பவரையும் வனத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் ஜோதிடர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளானது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள்  கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள் அவர்களை எல்லாம் ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்ற கேள்வியையும் பாமகவை சேர்ந்த தொண்டர்களும், சமூக வலைதள வாசிகளும் கேள்வி எழுப்ப தொடங்கினர்.

மேலும், "மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார்.  அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.  ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில்  தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கிளி ஜோசியம் பார்த்ததாக கைது செய்யப்பட்ட ஜோசியர்களை எச்சரித்து வனத்துறையினர் விடுவித்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த நான்கு கிளிகள் பறிமுதல் செய்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Forrest Dept Arrest Parrot Astrology


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->