பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி!. மீறினால் நடவடிக்கை பாயும்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தீபாவளி நாளில் அந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீபாவளி அன்று காற்று மாசின் தரம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

நீதிமன்ற தீர்ப்பை காரணமாக கூறி தமிழ்நாடு அரசு விதித்துள்ள இந்த கட்டுப்பாடு தீபாவளி கொண்டாடும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையும், பட்டாசு தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt announced Only 2hours allowed to burst firecrackers on Diwali


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->