பிரபல பாடகி உமா காலமானார்; அதிர்ச்சியில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் (வயது69) உடல் நலக் குறைவால் நேற்று இரவு சென்னையில் காலமானார். இவர் பாடிய ஆகாய வெண்நிலாவே, நீ பாதி நான் பாதி, பூபாளம் இசைக்கும், ஆனந்த ராகம் போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இவர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்டோரின் இசையில் எஸ்.பி பாலசுப்பிரமணியம், யேசுதாஸ் உள்ளிட்ட பலருடன் இணைந்து பின்னணி பாடல் பாடியுள்ளார்.

குறிப்பாக, நிழல்கள், தில்லுமுல்லு, வைதேகி காத்திருந்தாள், திருப்பாச்சி உள்பட பல்வேறு படங்களில் பாடியுள்ளார். 1980-90-களில் பின்னணிப் பாடகியாக சினிமாவிலும் தன் கணவர் ரமணனுடன் இணைந்து மேடைக் கச்சேரிகளிலும் கலக்கிய உமா ரமணன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous Tamil singer uma passed away


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->