இவங்கள உடனே "டிரான்ஸ்பர்" பண்ணுங்க.. தமிழக அரசுக்கு பரபரப்பு கடிதம்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை நடத்துவது குறித்தான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின.

அதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழ்நாடு முழுவதும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் இம்மாத இறுதிக்குள் அனைத்து அரசு அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அரசு அதிகாரிகள் தேர்தல் பணி அலுவலர்களாக நியமிக்கப்படும்போது அதே இடத்தில் பணிபுரிந்தால் அவர்கள் ஒரு சார்பாக செயல்பட வாய்ப்புள்ளதால் இந்த பணியிட மாறுதல் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn election commissioner request TNGovt transfer govt officials


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->