தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி போன்ற மாவட்டங்களில் இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே 110 டிகிரி சென்சஸ் வரை வெயில் இருக்கிறது. அதன்படி வருகின்ற 28ஆம் தேதி வரை வெப்ப அலை வீச ப்படும் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை முதல் 28ஆம் தேதி வரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,  திருச்சி, அரியலூர் உட்பட 24 மாவட்டங்களில் இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN 18 districts summer heat rise


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->