தமிழர்களின் கோவம் கண்டு பின்னங்கால் தெறிக்க ஓடிய மோடி..!! ஸ்டெர்லைட் படுகொலை..!!! - Seithipunal
Seithipunal


பொது மக்களின் கோபத்தைக் கண்டு அஞ்சி, மாநாட்டிற்கு வருவதை தலைவர்கள் ரத்து செய்தனர்….

தமிழக பா.ஜ.க. எஸ்.பி. பிரிவு மாநாடு, நாளை மாலை விழுப்புரத்தில், நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள, டெல்லியிலிருந்து, பாஜக. தலைவர் அமித்ஷா, உத்திர பிதேச முதல்வர் ஆதித்யநாத்யோகி, மற்றும் மத்திய மந்திரி நிர்மலை சீதாராமன் ஆகியோர் இந்த விழாவிற்கு பங்கேற்க வருவதாக அழைப்பிதழ்கள் அச்சிடப் பட்டுள்ளன. போஸ்டர்களும் அடிக்கப் பட்டுள்ளன.

இந்த விழாவிற்கு, தலைவர்களின் வருகைக்காக, விழுப்புரம், ஜானகிபுரத்தில் ஹெலிபேடும், பெரிய அளவிலான மாநாட்டுப் பந்தலும் போடப் பட்டுள்ளது. இந்த விழா நிகழ்ச்சிக்கு, மத்திய அமைச்சர், பொன். ராதா கிருஷ்ணன் அடிக்கோல் நாட்டினார்.

ஆனால், தற்போது துாத்துக்குடி கலவரத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில், 13 பேர் இறந்து விட்ட நிலையில், தமிழகம் முழுவதும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக, பல் வேறு அமைப்பினர், போராடி வருகின்றனர். மக்களின் கோபம் மத்திய அரசு மீது அதிக அளவில் இருக்கிறது.

இந்த கொந்தளிப்பான சூழ்நிலையில், இந்த மாநாட்டில், பாஜக. தலைவர்கள் கலந்து கொள்வதற்கு அச்சம் அடைந்தனர். ஏற்கனவே, கோபத்தின் உச்சியில் இருக்கும் தமிழக மக்களை அவர்கள் எதிர் கொள்ள பயந்தனர். அதனால், டெல்லியிலிருந்து வரும் பாஜக. தலைவர்களின் வருகை ரத்தாகி விட்டது.

நாளை நடைபெற இருக்கும் இந்த பாஜக. மாநாட்டில், பொன். ராதாகிருஷ்ணனும், தமிழிசை சௌந்தர் ராஜன் ஆகியோர் மட்டுமே, தலைமை வகித்து, விழாவை நடத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THOOTHUKUDI GUN SHOOT EFFECTS BJP MEETING CANCEL


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->