தூத்துக்குடியை கலங்கடிக்கும் அடுத்த பிரச்சனை - கலங்கி போய் நிற்கும் பொதுமக்கள் : அரசின் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பதிவுசெய்யப்பட்ட 68 விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைத் தங்குதளமாகக் கொண்டு 261 விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. இதில் 147 விசைப்படகுகள் மட்டுமே முறையாகப் பதிவு செய்யப்பட்டவை.

மற்ற விசைப்படகுகள் பதிவு செய்யப்படாதவை. தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983-ன் படி விசைப்படகுகள் 20 மீட்டர் நீளமும், 150 குதிரைத் திறன் இயந்திரமும் கொண்டதாக இருக்க வேண்டும்.

இதில், 71 விசைப்படகுகள் மட்டுமே இந்த விதிகள்படி உள்ளன. மற்ற விசைப்படகுகள் இந்தஅளவைவிட அதிகமானதாக உள்ளன.இதனால், அவற்றைப் பதிவு செய்ய மீன்வளத்துறை அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த2 நாட்களுக்கு முன் பதிவு செய்யப்படாத படகுகள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால், தூத்துக்குடியில் உள்ள பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மீனவர்கள் திடீர்ப் போராட்டம் நடத்தினர். மேலும்கடந்த 2 நாட்களாக விசைப் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இதையடுத்து மீன்வளளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், இன்று பதிவு செய்யப்பட்ட 147 படகுகளில் 68 விசைப்படகுகள்மட்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thoothukudi fisher mans starts strike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->