நீதிபதி நேரில் ஆய்வு.!! தங்கச்சி மடத்தின் துப்பாக்கிக் குண்டுகள் ஆய்வில் திடுக்கிடும் தகவல்..! - Seithipunal
Seithipunal


தங்கச்சி மடத்தின் ஆய்வு முடிவில் 11 ஆயிரம் துப்பாக்கிக் குண்டுகள்  கண்டெடுக்கபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது  திருவாடானை நீதிபதி பாலமுருகன் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில்,  ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் வீடு ஒன்றில் கிணறு தோண்டும் போது வெடிகுண்டுகள் கிடைத்துள்ளது. ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அருகே அந்தோணியார்புரம் பகுதியில் கழிவு நீர் கிணறு தோண்டும் போது இந்த வெடிகுண்டுகள் கிடைத்தது. 


மர்மமான முறையில் 20க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் காவல்துறையால் மீட்புகப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பெட்டிகளில்துப்பாக்கி குண்டுகள் துருப்பிடித்த நிலையில் இருந்துள்ளது.   

இது மிகவும் பழைய ஏகே 47 ரக துப்பாக்கிகள் என்று கூறப்படுகிறது. இவற்றை விடுதலைபுலிகள் அமைப்பைப் சேர்ந்தவர்கள் பயன்படுத்திருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: 

தங்கச்சிமடம் அந்தோணியார் புரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருள்களை அந்த இடத்துக்கு அருகிலேயே பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். விரைவில் அவற்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த ஆயுதக்குவியலில் சுமார் 11 ஆயிரம் துப்பாக்கிக் குண்டுகள் இருந்தன. இவை டி.ஜி.பி. அலுவலக ஆயுதக்கிடங்குக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த குண்டுகள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்ற விபரம் தெரியவில்லை.

ஆனால் கோடு எண் உள்ளது. இந்த குண்டுகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணுவ ஆயுதக் கிடங்குக்கு அனுப்பப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தி எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பது கண்டறியப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது தங்கச்சி மடத்தில், சம்பவ இடத்தில் திருவாடானை நீதிபதி பாலமுருகன்  நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvadanai Judge Balamurugan Trial In the


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->