காவல்துறையின் அட்டூழியம்..! பெண்களை தர தரவென இழுத்து சென்று கைது செய்து அராஜகம்.! சேலம் எட்டு வழி பசுமைச்சாலை எதிர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக, விவசாயிகளின் கருத்து அறியாமலேயே சேட்டிலைட் தொழில்நுட்ப உதவியுடன், வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் அத்துமீறி நிலத்திற்குள் நுழைந்து முட்டுக்கல் நடும் பணிகளை முடித்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாரப்பட்டி, கூமாங்காடு ஆகிய பகுதிகளில்  முட்டுக்கல் நடப்பட்டு உள்ள நிலங்களில், நேற்று  'மேனுவல் சர்வே' பணிகளுக்காக, டிஎஸ்பி சங்கர் நாராயணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர்களுடன் அதிகாரிகள் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த விவசாயிகள், அதிகாரிகளை நிலத்திற்குள் இறங்க விடாமல் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது மட்டுமில்லாமல் இரண்டு பெண்கள், அத்துமீறி விளை நிலத்துக்குள் காலை வைத்தால் நாங்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம், என  ஆவேசமாக கூறியபடி கிணற்றை நோக்கி ஓடினர். அந்த பெண்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.

நில உரிமையாளர்களும், அங்கு வேலை செய்து கொண்டிருந்த கூலித்தொழிலாளர்களும் சேர்ந்து மண்ணு தான் எங்க உசுரு எந்த காரணத்துக்காகவும் நாங்க நிலத்தை தர மாட்டோம், எங்களைக் கொன்னுட்டு எடுத்துட்டு போங்க என்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். பல பெண்கள் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர். மேலும், வரும் 13ம் தேதி எங்களது ஆட்சேபனை மனுக்கள் மீது சட்டப்பூர்வ விசாரணை நடக்க இருக்கிறது. அதற்குப் பிறகு நில அளவீடு செய்யுங்கள், என்று விவசாயிகள் பரிதாபத்துடன் கூறினர், ஆனால் அதனை அதிகாரிகள் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

இந்நிலையில், தொடர்ந்து விவசாயிகளும், கூலித்தொழிலாளர்களும் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தனர். ஒருகட்டத்தில் விவசாயிகளை சமாளிக்க முடியாமல் தடுமாறிய காவல்துறையினர், அவர்களை கைது செய்ய முடிவெடுத்தனர். அதற்கான முன்திட்டத்துடன் வாகனங்களைக் கொண்டு வந்திருந்த நிலையில்  பெண்கள் உட்பட 16 பேரை கைது செய்தனர். மேலும், பெண்கள் என்றும் பாராமல், அவர்களின் ஆடை விலகுவதை கூட காவல்துறையினர் பொருட்படுத்தாமல், ஆண் காவலர்களும் அவர்கள் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச்சென்று வாகனத்திற்குள் ஏற்றினர்.

பின்பு மீண்டும் விளை நிலத்துக்குள் இறங்கி வழக்கம்போல் அதிகாரிகள் அளவீடு பணிகளை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் மல்லூரில் உள்ள வெங்கடேஷ்வரா கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல். மாலை 5.30 மணியளவில் கைது செய்த அனைவரையும் விடுவித்தனர். இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரரிடமிருந்தும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Atrocities of Police Drag the girls to get the arrest and get anarchy Salem vs Eight Way Green


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->