"ரகசியங்களை வெளியிடுவது திமுகவிற்கு புதிதல்ல" இப்படி தான் ஏற்கனவே நடந்தது!! வெளியான தகவல்!!
Thambidurai says about dmk
கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, " ரகசியங்களை எப்போதும் வெளியிடுவது திமுகவின் வாடிக்கையான பழக்கம் தான்.
திமுக பொருளாளர் துரைமுருகன் கூட்டணி பேசிய ரகசியத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளார். இது புதிதல்ல. சந்திரசேகர் பிரதமராகவும் அவருக்கு ராஜூவ்காந்தி ஆதரவாகவும் இருந்த போது இலங்கையில் போர் நடந்தது.
அப்போது, இந்திய ராணுவத்தின் ரகசியங்களை இலங்கைக்கு தந்ததால் தான் அன்றே ஆட்சி கலைக்கப்பட்டது. தனது கட்சி கூட்டணி ரகசியங்களையே காப்பாற்ற முடியாத திமுகவால் இந்த நாட்டை எப்படி காப்பாற்ற முடியும்.
திமுக தலைவர் ஸ்டாலினின் அண்ணனான முக அழகிரியே திமுக வெற்றி பெறாது என தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி திமுக காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தவே அமைக்கப்பட்டுள்ளது." என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Thambidurai says about dmk