பொங்கல் நாள் அதுவுமா கேவலமான சாதனை படைத்த தமிழகம் - அரசு அதிகாரியே கூறிய அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 475 கோடி மதிப்பிலான மது விற்பனை ஆகியுள்ளது.

மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் முற்போக்காக சிந்திந்து, புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துவது தான் அரசின் கடமையாகும்.

ஆனால், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவோ, மக்கள் நலனுக்காகவோ துரும்பைக்கூட கிள்ளிப் போடாத அதிமுக  அரசு, புதிய மதுக்கடைகளை திறத்தல், மதுவகைகளை வீடுகளுக்கு கொண்டு சென்று வினியோகிப்பது போன்ற சமூகக்கேடான விஷயங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறது.

அரசுக்கான கடமைகள் அனைத்தையும் மறந்து விட்டு, மது விற்பதை மட்டுமே முதன்மைப் பணியாக அரசு கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டில் தொடங்கி இன்று வரை கடந்த 7 ஆண்டுகளாக ஒருமுறை கூட வரி வருவாய் இலக்குகளை தமிழக அரசால் எட்ட முடியவில்லை.

தமிழக அரசின் வரி வருவாய் வளர்ச்சி ரூ.67,000 கோடி குறைந்து விட்டது. இது பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழக அரசு மதுவணிகத்தை பெருக்குவதில் மட்டும் கவனம் செலுத்துகிறது

அந்த வகையில், இந்த வருடம் பொங்கல் விடுமுறை நாட்களில் ரூ. 600 கோடிக்கு மேல் மது விற்பனையாகும் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கடந்த 12ம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை 475 கோடி ரூபாய் அளவில் மது விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது 12ஆம் தேதி 105 கோடி ரூபாய், 13ம்தேதி 120 கோடி ரூபாய், 14ம்தேதி 110 கோடி ரூபாய், 15 ஆம் தேதி 140 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் அனைத்து நிதி நெருக்கடிக்கும் மது விற்பனையை அதிகரிப்பது தான் தீர்வு என்று தொலைநோக்குப் பார்வையற்ற தமிழக அரசு கருதுகிறது. ஆனால், தமிழகத்தின் இன்றைய அனைத்து சிக்கல்களுக்கும் மது விற்பனை தான் காரணம்

மது விற்பனையை பெருக்குவதன் மூலம் அரசின் வருவாய் சில ஆயிரம் கோடிகள் வேண்டுமானால் அதிகரிக்கலாம்... இது தமிழகத்தின் பிரச்சினைகளை தீர்க்காது.

மாறாக மதுக்கடைகளை மூடினால் அரசின் நேரடி வருமானம் ரூ.30,000 கோடி அளவுக்கு குறையலாம். ஆனாலும், மதுவால் மனித சக்தி வீணடிக்கப்படுவதை தடுப்பதன் மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 2% அதிகரிப்பதாக வைத்துக் கொண்டாலும் கூட, தமிழகத்தின் வருவாய் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் கோடி அதிகரிக்கும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரித்து வளமும் நலமும் பெருகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac target hit soon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->