தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு வருகிற 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் 19 ஆம் தேதி இரவு 12 மணி வரை மற்றும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடபட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளில் பொதுத்தேர்தல், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதியும், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு ஏப் 17ஆம் தேதி காலை 10 மணி முதல், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.19ஆம் தேதி இரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள், இணைக்கப்பட்ட பார்கள் அனைத்தையும் மூட வேண்டும். மேலும், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூட வேண்டும். 

மேலும், பீர் மற்றும் மது தயாரிப்பு நிறுவனங்கள் மது விற்பனை மற்றும் மாநிலத்தில் மது பாட்டில்களை வாகனத்தில் கொண்டு செல்வது என அனைத்தையும் தடை செய்வதற்கான உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac close in tamilnadu from coming april 17


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->