தொடர் குண்டுவெடிப்பு உளவுத் துறை எச்சரிக்கையை தொடர்ந்து அலெர்ட் செய்யப்படும் தமிழகம்.!!! - Seithipunal
Seithipunal


இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் இதையடுத்து தமிழகம் மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மக்கள் அதிக அளவில் கூடும் ரயில்நிலையம் பேருந்து நிலையம் மருத்துவமனை போன்ற  இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பொழுதுபோக்கு மையங்களில் அதிகமான கூட்டம் இருந்தது. இதனால் அந்த இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ரகசிய கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். முக்கிய ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும்இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தமிழக கடற்கரையை ஒட்டிய கிராமப்புற பகுதிகளிலும் போலீஸ் சோதனை ஈடுபட்டனர் . ராமேசுவரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் மற்றும் சென்னைகடற்பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர் சந்தேகத்துக்குரிய மீன்பிடி படகுகளில் சோதனையும் நடத்தினர். மேலும், 2 நாட்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக  டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TAMILNADU POLICE ALERT FOR SRI LANKA BOMB BLAST


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->