சேது ரயிலில் கிளப்பிய திடீர் புகை!! பதறிப்போன பயணிகள்.!! - Seithipunal
Seithipunal


நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சென்னையில் இருந்து பல லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். அந்த வகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற சேது விரைவு ரயில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

இந்த நிலையில் இன்று மாலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை கிளம்பியது.

இதனால் பதறிப் போன பயணிகள் அளித்த தகவலின் பெயரில் ரயில் ஓட்டுநர் கிண்டி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தினார். அதனைத் தொடர்ந்து புகை கிளம்பிய இடத்தை ரயில்வே ஊழியர்களும் ஓட்டுனரும் சோதனை செய்ததில் பிரேக் பிடிக்கும் போது ஏற்பட்ட அழுத்தத்தினால் புகை உருவானது கண்டுபிடிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudden smoke in Setu Express train


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->