8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் குதித்த மாணவ மாணவியர்கள்!. தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்த மாணவர்கள்! - Seithipunal
Seithipunal


தஞ்சை  மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். பின்னர் கல்லூரி வளாக நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மாணவ போராட்டத்திற்கு தமிழ்நாடு மாணவர் இயக்க நிர்வாகிகளுக்கும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவ மாணவியர்கள் பல கோரிக்கைகளை வைத்தனர். இதில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களை முற்றிலும் கைவிட வேண்டும். காவிரிமேலாண்மை விரைவில் அமைக்க வேண்டும். மாணவர்களின் மருத்துவராகும் கனவை அழிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.

அங்கு போராடியவர்களை கைது செய்யும் நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும். கைதானவர்களை உடனே விடுதலை செய்து, அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளையும், விளைநிலங்களையும் பாதிக்கக்கூடிய சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைக்கும் முடிவை உடனே கைவிட வேண்டும். தஞ்சை-மதுரை இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்து மாணவர்கள் போராடினர்.

இதில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.  இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நிறைவேறும் வரை போராடுவோம் என மாணவ மாணவியர்கள் கூறினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students of college students boycotted the classes protesting against the Salem 8 ways road order.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->