ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த வருடம் மே மாதம் 22ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 15 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்ததை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், வேதாந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ''தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது எனவும், சில கட்டுப்பாடுகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாம்'' என்றும் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து ஆலையை திறப்பதற்கான ஏற்பாடுகளை ஆலை நிர்வாகம் செய்து வருகிறது. 

ஆலை மீண்டும் திறப்பதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதன் பிறகு, ஸ்டெர்லைட் ஆலை செயல்பட பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 

இந்நிலையில், ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டும். போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி ஆட்சியர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sterlite copper open in supreme court new judgement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->