சிலம்பம் போட்டியில் பங்கேற்று மாநில அளவில் தங்கம் வென்ற திவ்யா.! ராகிங்கில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சோகம்.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தை சார்ந்தவர் பழனிவேல்., இவரது மகளின் பெயர் திவ்யா (வயது 21). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் இளங்கலை பட்டம் பயின்று வருகிறார். 

திவ்யா கடந்த வருடம் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கு பெற்று., அந்த போட்டியில் தங்கம் வென்று வந்தார். இந்நிலையில்., பள்ளியில் பயிலும் சக மாணவிகள் இவரிடம் மீண்டும் எப்போது தங்கம் வென்று வருவாய் என்று கிண்டல் அடித்துள்ளனர். 

இதனால் மனம் உடைந்த அவர் தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த திவ்யாவின் தந்தை பழனிவேல் கல்லூரி பேராசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில்., மாணவிகள் மீண்டும் தொடர்ந்து கிண்டல் அடிக்க துவங்கியதால்., மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வீட்டிற்கு சென்ற போது தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை அறிந்த பெற்றோர்., விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். 

இது குறித்து திவ்யாவின் தந்தை பழனிவேல் கூறியதாவது., எங்களது குடும்பத்தில் யாரும் எழுத படிக்க தெரியாதவர்கள்., திவ்யாதான் முதன் முதலாக படிக்க துவங்கினார்., சிலம்பம் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றதோடு., நடனம் மற்றும் பேச்சுப்போட்டியில் பங்கேற்று பல பரிசுகளை வாங்கி வந்து எங்களை மகிழ்விப்பார்.

அவரது திறமையினால் முன்னேறிவிட கூடாது என்று நினைத்த சக மாணவிகள் செய்த ராகிங் காரணமாக அவர் தற்கொலை முடிவிற்கு வந்துள்ளார். இது குறித்து ஏற்கனவே ஆசிரியர்களிடம் புகார் அளித்தும்., அவர்கள் எடுக்காத நடவடிக்கையே எனது மகளின் இறப்பிற்கு காரணம் என்று கண்ணீருடன் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

state level silampam champion divya attempt suicide when attempt raging


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->