சட்டமன்றத்தில் ஜெ.வின் ஆடையை அவிழ்த்த திமுக., பெண்ணுரிமை பற்றி பேசலாமா?! பெண்ணின் கேள்வியால் திணறிய ஸ்டாலின்!! - Seithipunal
Seithipunal


மார்ச் 23 ஆம் தேதி சென்னையில் "கொலையுதிர் காலம்" படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மற்றும் பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த விழாவில் பேசிய பழம்பெரும் நடிகர் ராதா ரவி, நயன்தாரா குறித்து ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்டார். இது இணையத்தில் வைரலாகி தற்போது சர்ச்சையை கிளப்பியது.

இதனை தொடர்ந்து அவரை திமுக தற்காலிகமாக நீக்கம் செய்தது. ஆனால், ராதாரவி 'நான் முழுமையாக கட்சியை விட்டு விலகிக் கொள்கிறேன்' என விலகிவிட்டார்.

ராதாரவியின் பேச்சினை கண்டிக்கும் விதத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், 'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சட்டமன்றத்திலேயே திமுக அடித்து உதைத்தது எல்லாம் பெண்களிடம் அத்துமீறும் நிகழ்வு இல்லையா? 

திமுகவின் பேச்சாளர் வெற்றிகொண்டான் கூட ஜெயலலிதாவை பேசிய பேச்சுக்கள் எவ்வளவு கீழ்தரமானவை?' என கூறியுள்ளார். இவ்வாறு, பெண்களுக்கு ஏற்படும் அநீதியை கண்டு பொங்குவதை போல திமுக தேர்தல் நேரத்தில் நாடகமாடுகிறது. 

என்னை பற்றியும் ராதாரவி மோசமாக விமர்சித்த போதெல்லாம் பெண்ணுரிமை மீறலாக தெரியவில்லையா?" எனவும் கூறினார். இதுகுறித்து பெண் இருவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில், 

"சட்டபேரவையில் ஜெ.வின் ஆடையை இழுத்த திமுகவிற்கு, நயன்தாரா விஷயத்தில் பெண்ணுரிமை பேச தகுதி இருக்கிறதா? #DMKFails" என இணையத்தில் திமுகவை விமர்சித்துள்ளார். 



 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin sad about nayandhara issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->