ஆம்னி பேருந்துகளின் வழித்தடம் மாற்றம்.!! முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு விரைவு பேருந்துகளில் 1.20 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோன்று தனியார் ஆம்னி பேருந்துகளிலும் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் ஆம்னி பேருந்துகளின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை முதல் 11 ஆம் தேதி வரை ஆம்னி பேருந்துகள் வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படாது .

கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் வழித்தடம் நசரத்பேட்டை வழியாக வண்டலூர், கிளாம்பாக்கம் வெளிவட்டச் சாலை வழியே இயக்கப்பட உள்ளது. இதனால் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களில் பயணிக்கலாம்.

ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

southern districts Omni bus route change


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->