சிறுவியாபாரிகளை அதிர வைத்த அரசின் உத்தரவு..? ஆதாரத்துடன் அம்பலப்படுத்தப்படும் உண்மைகள் - நாடாளுமன்றம் வரை காட்டப்பட்டமேற்கோள்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும்போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் பல தலைமுறைகளாக சிறிய டீக்கடைகள், பொம்மைகள் விற்பனை போன்றவற்றை வியாபாரிகள் பாதையோரங்களில் விற்று வந்தனர்.

இதன்மூலம் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் தங்களின் வாழ்வாதாரத்தை பூர்த்திசெய்து வந்தனர்.

இந்த நிலையில்ஏற்காடு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வரும் ஜனவரி 8ம் தேதிக்குள் அங்கு வைக்கப்பட்டுள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடை வைத்து வாழ்க்கையை நகர்த்தி வந்த சிறுவியாபாரிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில்,பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், தலைமுறை தலைமுறையாக இந்த பாதையோர கடைகளை நம்பி தான் தங்களின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து வருகிறோம்.

இதுவரை அந்த பகுதிகளில் குத்தகைதாரர்களிடம் வரியும் முறையாக செலுத்தி வருகிறோம். இச்சூழலில் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், 2012ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சாலையோர சிறு விற்பனையாளர்கள் பாதுகாப்பு சட்டப்படி மக்கள்கூட கூடிய இடங்களில் கடை வைத்துக் கொள்வது, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, வங்கி கடன்கள் வழங்குவது மற்றும் காவல்துறை மற்றும் நிர்வாகத்தை சார்ந்தவர்கள் எந்த இடையூறும் அளிக்கக் கூடாது என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, இந்தசட்டத்தை அமல்படுத்தி ஏற்காடு படகு இல்லம் அருகில் உள்ள சாலையோர கடைகளை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

small shop vendors starts strike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->