ஸ்டாலின் காமெடி நடிகராக மாறிவருகிறார் என அமைச்சர் நக்கல்!! - Seithipunal
Seithipunal


மதுரை திருப்பரங்குன்றத்தில் அரசு மருத்துவமனை சார்பில்ரூ1.50 கோடி மதிப்பீட்டில் 40 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில், அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் ஆர் வி உதயகுமார், ராஜன் செல்லப்பா மற்றும் கலெக்டர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம்," அமைச்சர்களை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் கருத்துகள் பேசலாம். ஆனால், கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை மற்றும் ஆட்சிமன்ற குழுக்கள் மட்டும்தான் முடிவெடுக்கும். அதுவும் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் முடிவு எடுக்கும்.

40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து நிற்பது போல் தான் தற்போது வரை பணியாற்றி வருகிறோம். 40 தொகுதிகளிலும் தொண்டர்களிடம் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆனால், நாங்கள் தனித்து நிற்பதா அல்லது கூட்டணி வைப்பதா என்பதை தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்வோம். திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது மிகவும் நகைச்சுவையாக உள்ளது.

ஊர் ஊராக சென்று ஸ்டாலின் கிராம சபை என்ற பெயரில் ஏதேதோ பேசி வருகிறார். எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்றது திமுகதான். துணை முதல்வராக ஸ்டாலின் இருந்தபோது எந்த ஊருக்கும் சென்று மக்களிடம் குறைகளை கேட்டதில்லை.

ஸ்டாலினும் கலைஞர் வழியிலேயே மக்களிடத்தில் பொய் பேசிக் கொண்டு வருகிறார். திமுக ஆளுங்கட்சியாக வந்தால் குடும்பத்தை மட்டுமே நினைக்கும். ஒருபோதும் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்காது என்பது மக்கள் கூறும் கருத்தாகும்.

ஸ்டாலின் தற்போது நகைச்சுவை நடிகராக மாறி வருகிறார். தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும். தற்போது, வெளியிடப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் மிகவும் சிறப்பானதாக உள்ளது" என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sellur raju says about stalin became a comedy hero


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->