இதுவும் தமிழ்நாடுதான்! பத்து கிலோமீட்டர் நடந்து பள்ளி செல்லும் மாணவர்களின் பரிதாப நிலை! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல்லை அடுத்த கூவனுாத்து அருகே உள்ளது, குரும்பபட்டி மற்றும் கொலக்காரன்பட்டி ஆகிய இரண்டு கிராமங்கள். இந்த கிராமங்கள் ஒவ்வொன்றிலும், தலா 2000 மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கிராமங்களில் உள்ள சிறுவர் சிறுமியர் எல்லாம், நொச்சி ஓடைப்பட்டி, திண்டுக்கல், வேம்பார்பட்டி, கொசவபட்டி ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று படித்து வருகி்ன்றனர்.

ஆனால், இவர்களுடைய மிகப் பெரிய மனக்குறை, இவர்களுக்கு பேருந்து, சரியான நேரத்திற்கு இல்லாதது தான். திண்டுக்கல்லில் இருந்து செல்லும் டவுன் பஸ் இந்தக் கிராமங்களை அதிகாலை 6.30 மணிக்கு கடந்து சென்று விடுகிறது. இதனால், பள்ளிக்குச் செல்பவர்கள், தனியார் மில்களில் வேலை செய்பவர்கள் நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. 

வேறு வழியில்லாமல், இந்த கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள், 5 கி.மீ. துாரத்திற்கு, தினமும் நடந்தே பள்ளிகளுக்கு செல்கின்றனர். இதனால், இவர்களுக்கு பள்ளிக்குச் செல்ல தாமதம் ஏற்படுகிறது.    திரும்ப பள்ளி முடிந்து திரும்ப மாலை 4.30 மணி ஆகி விடுகிறது. ஆனால், அரசுப் பேருந்து 3 மணிக்கெல்லாம், சென்று விடுகிறது.

இப்படி யாருக்குமே, உபயோகம் இல்லாத நேரங்களில் பேருந்துகள் இயக்கப் படுவதால், பேருந்தும், ஆட்கள் இன்றி வெறுமனே செல்கிறது. அதனால், இந்த கிராம மாணவர்கள், பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்கும் 5 கி.மீ. துாரம் நடந்து செல்ல வேண்டி இருக்கிறது. ஆக, காலையும், மாலையும் சேர்த்து 10 கி.மீ. துாரம் நடந்து செல்ல வேண்டி இருக்கிறது.

இதற்கு ஒரு வழி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நேற்று முன் தினம், இந்த கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள், பள்ளி சீருடையுடன், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, பேருந்து நேரத்தை மாற்றி, தங்களுக்கு பயன் உள்ளதாக பேருந்துகளை, தங்கள் ஊர்களுக்கு இயக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school students walk 10 km per day for go to school


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->