தண்ணீரைக் குடித்து பசியைப் போக்கிய பள்ளி மாணவர்கள்...அதிகாரிகளின் நியாயமற்ற செயல்..! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி வட்ட வருவாய் துறை சார்பில், முதல்வர் மக்கள் தொடர்பு திட்டத்தின் மூலமாக, நேற்று முன்தினம் வானகரம் ஊராட்சிக்கு உட்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.இதில் கலந்துகொண்ட கணபதி மக்களுக்கு திருமண உதவி தொகை, முதியோர் உதவி தொகை, பட்டா உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பின், அரசு அதிகாரிகள், பள்ளி மாணவர்களுக்கு உணவு அருந்த இடம் தராமல், அவர்களை வெளியே காக்க வைத்து விட்டு, முதலில் உணவருந்தினர். இதனால், காலை முதல் நிகழ்ச்சியில் காத்திருந்த பள்ளி மாணவர்கள் பசியின் வாட்டத்தால் சோர்ந்தனர்.

இதனால், பசி மயக்கத்தில் இருந்த பள்ளி மாணவ - மாணவியர் தண்ணீரை குடித்து, பசியை போக்கினர். குழந்தைகளை காக்க வைத்த, அரசு அதிகாரிகளின் இந்த நியாயமற்ற  செயல் அனைவரையும் முகம்சுழிக்க செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School students quenched their hunger by drinking water


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->