மலைக் கோட்டை நகரில்.. லட்சக் கணக்கில் வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மத்தியில் உள்ள மலைக்கோட்டை நகரத்தில், நவலான பகுதியில் இன்ஸ்பெக்டராக இருப்பவர், முருகனின் மற்றொரு பெயரில், உள்ள சர்ச்சைக்குப் பெயர் போன டெல்லியில் இருக்கும், தமிழ் அரசியல்வாதியின் பெயரைக் கொண்டவர்.

இவருக்கு, காவல் துறை வட்டாரத்தில், சுத்தியடி என்ற பட்டப் பெயர் உள்ளது. திருச்சிக்கு வருவதற்கு முன்பாக, இவர் சேலத்தில் எஸ்.ஐ.-ஆக இருந்திருக்கிறார். யாரை எப்படிக் கவிழ்க்க வேண்டும், எப்படி வீழ்த்த வேண்டும், என்ற காவல் துறை பாடங்களில், மிக தேர்ச்சி பெற்றவர்.

இவர் பணி புரியும் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள பெல்கண்டம் ஊரில் இன்ஸ்பெக்டர் இல்லாதது, இவருக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. அந்த ஊரில் கோரையாறு, கோலார்பட்டி, ஓலையூர், கலிமங்கலம், துறைக்குடி போன்ற பகுதிகளில் ஆற்று மணல் கொள்ளை அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனை அறிந்து கொண்ட சுத்தியடி, அவர்களிடம் பேரம் பேசினார். இரவில் மட்டுமே, மணல் திருட்டு, ஒரு ஆளுக்கு ஒரு லோடு தான் உள்ளிட்ட முக்கிய கன்டிசன்களோடு, மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்து விட வேண்டும், என்று அறிக்கை விட்டார்.

அதன்படி, மாதா மாதம் சரியாக மாமூல் லட்சக் கணக்கில், இவருக்கு கொட்டுகிறது. இது தவிர, டிராக்டரில் மணலை அள்ளவும், அனுமதி தந்து, அதன் மூலமாக மாதம் ஒவ்வொரு டிராக்டர் உரிமையாளரிடம் இருந்தும், மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் வேறு, தனியாக வந்து, பாக்கெட்டை வெடிக்க வைக்கும் அளவிற்கு, பணம் குவியாய் குவிகிறது.

இதைக் கண்டு, பக்கத்தில் உள்ள பண வருவாய் அற்ற பகுதியில் உள்ள காவல் அதிகாரிகள், பொறாமையில் வயிற்றெரிச்சலில் இருக்கிறார்களாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sand robbery in trichy with police support


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->