விதிகளை மீறிய 40 ஆம்னி பேருந்துகள்: போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி நடவடிகை.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை ஒட்டி வெளியூர்களில் தங்கி இருந்த பலரும் கடந்த சில நாட்களாக சொந்த ஊர்களுக்கு வந்தனர். பின்னர் தேர்தல் முடிந்ததால் அவர்கள் நேற்று மீண்டும் அவரவர் வசிக்கும் இடங்களுக்கு புறப்பட ஆரம்பித்தனர். 

இதனை ஒட்டி பேருந்து ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் சிலர் தனியார் பேருந்துகளில் சென்னை, பெங்களூரு, கோவை போன்ற பல்வேறு நகரங்களுக்கு புறப்பட்டனர். 

அப்போது தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிரமாக தனியார் வாகனங்களை கண்காணித்தனர். 

மேலும் சென்னை புதிய பேருந்து நிலையம் ஓமலூர், வாழப்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக நபர்களை ஏற்றி அவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு சாலை விதிகளை மீறியதாக தெரிவித்து 40 ஆம்னிகளில் உரிமையாளர்களுக்கு ரூ. 85 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem omni buses fined


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->