திமுகவின் கரை படிந்த கரங்களை அறிந்தவர்களுக்கு தற்கொலை தான் தண்டனையா..? இன்றைய நாளின் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியாக பார்க்கப்பட்ட சாதிக்பாட்சாவின் நினைவு தினம் இன்று.

கடந்த 2011 ஆம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் துப்பு துலக்க ஆ.ராசாவின் நண்பரும், திமுகவினரின் பினாமி என்று கருதப்பட்டவருமான கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகி சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கைகைகளை தொடங்கியது.

விசாரணை நடந்து வந்த நிலையில், 2011ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், திமுக புள்ளிகளின் நெருக்கடியினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியது.

இதனை தொடர்ந்து, திருச்சியில் 17 /05 /2016 அன்று திடீரென செய்தியாளர் சந்திப்பு நடத்திய, அரியலூர் மாவட்டம், அய்யூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர், தான் தமிழர் நீதிக்கட்சியின் தலைவர் சுப.இளவரசனின் உதவியாளர் என்றும், ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோருடன் சேர்ந்து சாதிக் பாட்சாவை கொலை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், இந்த ரகசியத்தை தற்போது வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாதிக்பாட்சா மட்டுமல்ல யார் யாரெல்லாம் திமுகவின்  கறை படிந்த கரங்களை முழுக்க தெரிந்து வைத்திருந்தினரோ அவர்கள் அனைவருக்கும் இதே கதிதான் ஏற்பட்டுள்ளது என்றும், இதற்கு முன்பு அண்ணாநகர் ரமேஷ் மர்ம மரணம் , கே.கே.நகரை சேர்ந்த திமுக பெண் நிர்வாகியின் துப்பு துலக்கப்படாத கொலை அனைத்திலும் உள்ள உண்மைகள் வெளியே வந்தால் அந்த கட்சியிலும், தமிழக அரசியலிலும் மாபெரும் மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sadiq-basha-death-day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->