ஊட்டியில் உற்சாகமாக நடனமாடிய ராகுல் காந்தி.! - Seithipunal
Seithipunal


ஊட்டியில் உற்சாகமாக நடனமாடிய ராகுல் காந்தி.!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம். பியுமான ராகுல்காந்தி மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரபட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதுடன் எம்.பி பதவியும் பறிபோனது. 

சூரத் நீதிமன்றம் விதித்த இந்த தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி ஆகி நாடாளுமன்றதிற்கும் சென்று உரை ஆற்றினார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தன்னுடைய தொகுதியான வயநாட்டை பார்வையிடுவதற்கு இன்றும், நாளையும்   திட்டமிட்டுள்ளார். மேலும், இந்த பயணத்தில் அவர் ஊட்டி வருவதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. 

அதன்படி ஊட்டிக்கு வந்த அவருக்கு அங்கிருந்து தோடர் இன மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட ராகுல் காந்தி தோடர் இன மக்களை போலவே ஆடை அணிந்து அவர்களுடன் நடனமாடினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragul gandhi dance in ooty


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->