தேசிய நெடுஞ்சாலையை ஊரக சாலையாக்கி மது கடை திறக்கலாமென்றால்.. நாங்கள் ஏன் இப்படி செய்யக்கூடாது..? - Seithipunal
Seithipunal


தேசிய நெடுஞ்சாலையை ஊரக சாலையாக்கி மது கடை திறக்கலாமென்றால், பைக் பெயரை சைக்கிள் என மாற்றி கொண்டால் ஓட்டுநர் உரிமம் தேவை இல்லையா..? என்று மக்கள் ஒரு கேள்வியை முன்வைத்து உள்ளனர்.

தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், அவற்றில் கவனம் செலுத்தாத பினாமி அரசு மதுக்கடைகளை திறப்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறது.

கடந்த மார்ச் மாதம் வெளியான தீர்ப்பில், மது வணிகத்திற்கு தடை விதிப்பதில் தேசிய நெடுஞ்சாலைகளையும், மாநில நெடுஞ்சாலைகளையும் பிரித்துப் பார்க்க முடியாது.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதும், விபத்துக்களை ஏற்படுத்துவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் தான் நடக்கிறது என்று கூற முடியாது.

அதனால் தான் இரு வகை நெடுஞ்சாலைகளிலும் மது வணிகத்திற்கு தடை விதித்தோம்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

அப்போது மதுவுக்கு தடை விதிப்பதில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இப்போது நகரங்களுக்குள் செல்லும் சாலைகளையும், நகரங்களுக்கு வெளியில் உள்ள சாலைகளையும் பிரித்துப் பார்த்து மதுவுக்கு அனுமதி அளித்திருப்பது புரியாத புதிராக உள்ளது.

தேசிய, மாநில நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடும்படி தீர்ப்பளிக்கப்பட்டதன் நோக்கமே சாலை விபத்துக்களைக் குறைக்க வேண்டும் என்பது தான்.

இதிலிருந்து நகர்ப்புற நெடுஞ்சாலையோர மது வணிகத்திற்கு மட்டும் விலக்களிப்பது எந்த வகையில் நியாயம்.

கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 25 நகரப்பகுதிகளாவது இருக்கும். 

உச்சநீதிமன்றம் இப்போது வழங்கியுள்ள தீர்ப்பின்படி கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரும் வாகனத்தின் ஓட்டுனர் 25 இடங்களில் மது அருந்த வாய்ப்புள்ளது.

நகரப்பகுதிகளில் மது அருந்திவிட்டு, புறநகர நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும்போது சம்பந்தப்பட்ட ஓட்டுனருக்கு போதை ஏற்படாது என்றோ, விபத்து ஏற்படாது என்றோ உத்தரவாதம் தர முடியுமா?

இதனை எல்லாம் பற்றி  பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் குமுறி வரும் மக்கள். சாலையின் பெயரை மாற்றி இவர்கள் மதுக்கடை திறக்கும் பொழுது, வாகனத்தின் பெயரை மாற்றி நாங்கள் ஏன் ஓட்டுனர் உரிமம் வேண்டாம் என கோரிக்கை வைக்க கூடாது..? என்று காட்டமான கேள்வியை எழுப்பி உள்ளனர்.

இது நடக்காது தான். இருந்தாலும் மக்களை சாந்தப்படுத்த படிப்படியாக மதுக்கடைகளை மூடி, இறுதியில் பூரண மது விலக்கு என்ற நிலைக்கு கொண்டு வரலாம்.

ஆனால் நம் அரசு, மதுவில் வருமானத்தின் ருசியை பார்த்து விட்டது. இனி அந்த போதையில் இருந்து மீட்கவா முடியும்..?

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

protest demonstration organised


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->