அதையுமா செல்பி எடுப்பிங்க?? தேர்தல் நாளன்று நடந்த அத்துமீறல்!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் நேற்று முன்தினமான ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சாவடி மையத்துக்குள் செல்போன் எடுத்துச் செல்லவோ, செல்பி எடுக்கவோ அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனாலும், வாக்களிக்க வந்த பெரும்பாலானோர் செல்போன் கொண்டு வந்திருந்தனர். ஆனால், வாக்களித்துவிட்டு வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியே வந்த இளைஞர்கள் செல்போன் மூலம் ஓட்டுளித்ததற்கான அழியாத மை அடையாளமாக வைக்கப்பட்டு இருந்த விரலை செல்பி படம் எடுத்து பேஸ்புக், வாட்ஸ்அப்களில் போட்டு மகிழ்ந்தனர்.

தமிழக்தில் பெரு நகரங்களில், வாக்குச்சாவடி அமைந்த வளாகத்திற்கு வெளியே பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் கிராமப்புற வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட பல இடங்களில் பாதுகாப்புகள் குறைவாகவே இருந்தது.

தேர்தல் அன்று வாக்களித்துவிட்டு வெளியே வந்து செல்பி எடுத்து இணையதளங்களில் பதிவு செய்வதில் இளைஞர்கள் ஆர்வம் செலுத்தினர். ஒரு சில இடங்களில் பலர் தான் வாக்களிப்பதை செல்பி எடுத்து இணையத்தில் பதிவிட்டு வந்தனர். அதற்கு முக்கிய காரணமே போதிய பாதுகாப்பின்மையே. ஒரு சில வாக்குச்சாவடிகளில் நடந்த பிரச்சனையால் ஜனநாயக கடமையாற்ற வெளியூர்களில் இருந்து சிரமப்பட்டு வந்தவர்களுக்கு பெரிதும் அதிருப்தி ஏற்பட்டது.

வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து பலர் பேருந்துகளிலும், ரயில்களிலும் படியில் தொங்கிக்கொண்டு சொந்த ஊருக்கு பயணம் செய்து வாக்களித்தனர். ஆனால் வாக்குச்சாவடிகளில் போதிய பாதுகாப்பின்மையால் இதற்காக தான் சிரமப்பட்டு வந்தோமா என்ற மனநிலை உருவானதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poor protection in election booth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->