அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்: VCK திடீர் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


கடலூர், அம்பலவாணன் பேட்டை கிராமம் பகுதியில் அம்பேத்கர் சிலை உள்ளது. அங்கு நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் திடீரென அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் வந்த நான்கு பேரை பிடிக்க விரட்டினர். ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. 

இது குறித்து தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் அப்பகுதியில் திரண்டு, அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசி அவர்களை குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். 

இதனை தொடர்ந்து துணை மேயர் அம்பேத்கர் சிலைக்கு பாலூற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்கிடையே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol bomb throw Ambedkar statue issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->