கஜா புயல் நிவாரண நிதியை வழங்காததால், ரேசன், ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பிக் கொடுத்த மக்கள்….! - Seithipunal
Seithipunal


 

நாகப்பட்டினத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட புயலினால், இந்தப் பகுதியில் உள்ள காமேஸ்வரம் என்ற கிராமத்தில், படகுகள் அனைத்தும் சேதம் அடைந்தன.

புயலால் சேதமடைந்த படகு மற்றும் இன்ஜின், மற்றும் மீன் பிடி வலைகளுக்காக, ரூ.1.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும், என்று தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், புயல் கரையைக் கடந்து 74 நாட்கள் ஆகியும், இவர்களுக்கு, எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதனால், இது பற்றி, அதிகாரிகளிடம் கேட்டும், அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.

அதனால், வெகுண்ட காமேஸ்வரம் கிராம மக்கள் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பாக குவிந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர். பின், தங்களுக்கு நிவாரணம் வழங்கப் படாததைக் கண்டித்த அந்த மக்களில், 150 பேர், தங்களிடமுள்ள, ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை போலீசாரிடம் கொடுத்து, கலெக்டரிடம் ஒப்படைக்கும் படி கொடுத்து விட்டுச் சென்றனர்.

இந்த ஆவணங்கள் அனைத்தும், நாகை தாசிலதார் இளங்கோவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம், நாகையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

people handed over their documents to the collector office


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->