பாம்பன் இரயில்வே பாலத்திற்கு வந்த விடியல்.!! வெளியான அறிவிப்பு., கொண்டாட்டத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தையும் இராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் முக்கிய பாலமாக சாலைவழி மேம்பாலமும்., இரயில்வே வழி மேம்பாலமும் உள்ளது. இந்த பாலத்தின் மூலமாக இராமேஸ்வரம் தீவில் உள்ள பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். 

                 

இந்த பாம்பன் பாலமானது கடந்த 1914 ம் வருடம் அன்றிருந்த ஆங்கிலேய அதிகாரிகளால் கட்டப்பட்டது ஆகும். தற்போது இந்த பாலம் கட்டி சுமார் 104 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்., இந்த பாலத்தின் வழியாக இராமேஸ்வரத்திற்கு வட மாநிலங்களில் இருந்து வரும் முக்கியமான அதிவிரைவு இரயில்கள் மற்றும் இராமேஸ்வரம் கோவில்களுக்கு இரயில் வழியாக செல்லும் பக்தர்களுக்கு பிரதான பாலமாக இருப்பது இந்த பாம்பன் பாலமாகும். 

இந்த பாலத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக அங்கிருந்த கப்பலானது பாலத்தின் தூண் மீது மோதி விபத்திற்குள்ளானது., இதன் காரணமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலத்தை சீரமைத்தனர். மேலும்., இதன் காரணமாக அந்த வழியாக செல்ல இருந்த அனைத்து இரயில்களும் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் பெரும் அவதியடைந்தனர். 

இதனைத்தொடர்ந்து., பாம்பன் பாலத்தில் உள்ள தூக்கு பாலத்தில் ஏற்பட்ட விரிசலின் காரணமாக இராமேஸ்வரத்திற்கு செல்ல வேண்டிய இரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இந்த பழைய பாலத்திற்கு பதிலாக புத்தாண்டு கொண்டாட்டத்துடன் புதிய பாலம் கட்டுவதற்கான அறிவிப்பை இரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

அந்த வகையில்., இந்த பாலம் சுமார் ரூ.250 கோடி செலவில் கட்டப்படுவதாகவும்., இதற்க்கான ஆய்வுப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் வரும் மாதம் இதற்கான பணிகள் அனைத்தும் தொடங்கப்பட உள்ளதாகவும் இரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள பாலத்திற்கு அருகில் சுமார் 3 மீ அதிகமான உயரத்தில் புதிய பாலமானது அமைய விருப்பதாகவும்., இதன் காரணமாக ஒரே சமயத்தில் சுமார் 2 கப்பல்கள் கடந்து செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய பாலமானது இரட்டைவழி இரயில்வே பாலமாக அமையும் என்றும்., சுமார் 63 மீ நீளமுள்ள தூக்கு பாலமும் இதில் இடம்பெறும் என்றும்., செங்குத்தாக தூக்கு பாலத்தை திறந்து மூடும் வகையில் தானியங்கி மின் மோட்டார் வசதியும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்., இந்த பாலத்தின் கட்டுமான பணிகளானது முடிவதற்கு 4 வருடங்கள் முதல் 5 வருடங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PAMBAN BRIDGE NEW CONSTRUCTION WILL STARTED NEXT MONTH


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->