இனி ஓயாமல் அலுவலகத்திற்கு அலைந்து அவதிப்பட வேண்டாம்! மக்களின் சிரமம் போக்க முதல்வரால் தொடங்கப்பட்ட புதிய அதிரடி திட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெறுவதற்காக பொதுமக்கள் அலுவலகத்திற்கும், வீட்டிற்கும்  நடையாய் நடந்து வந்தனர். இதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானர்.இந்நிலையில் மக்களின் சிரமத்தை போக்குவதற்காகவும், அவர்கள் குறைந்த செலவில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறவும் தமிழ்நாடு அரசு புதிய திட்டம் ஒன்றை தொடங்கி வைத்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து, அதனை சான்றிதழாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். crstn.org என்ற இணையதளம் மூலம் 21 நாட்களில் இந்த சான்றிதழ்களை இலவசமாக மக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

மேலும் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கான சான்றிதழ், அந்த குழந்தையின் தாய், மற்றும் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யும் அன்று மருத்துவமனையிலிருந்து வழங்கப்படும் என்றும். தனியார் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கான சான்றிதழ்களை பெற்றோர்கள் 21 நாட்களுக்கு பின், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் கூறுகையில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி தற்போது சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைமுறையில் உள்ளது.அதைப்போலவே இனி தமிழகம் முழுவதும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்வதற்கான மென்பொருள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களும் இ-சேவை மையத்தில் இருந்து பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் கணினி மூலம் வீட்டிலிருந்தோ அல்லது கணினி மையத்திற்கு சென்றோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் மக்களின் சிரமங்கள் பெருமளவில் குறைக்கப்படுகிறது. என தமிழக முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

palanisamy start new birth deadth certificate scheme for people


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->