ஊட்டி மலையில் எரிமலையா..?! ஒரு மாதமாக வெளிக்கிளம்பும் புகை..!! அரண்டு போய் நிற்கும் ஊட்டி மக்கள்..!!! - Seithipunal
Seithipunal


ஊட்டி அருகே வனத்தில் மீண்டும் பூமிக்குள் இருந்து தீ….

பத்து வருடங்களுக்கு முன்பாக, 2007-ஆம் ஆண்டில், ஊட்டி அருகே உள்ள நீத்தி வனத்தில், பூமி பிளவுபட்டு, புகை வெளியானது. இதனை அப்போது, புவியியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

பூமிக்குள், எரிமலையோ, வேறு காரணங்களோ இல்லை. பல வருடங்களுக்கு முன்பாக, மண்ணுக்குள் புதைந்து போயிருந்த மரம் செடி கொடிகள், அதிக வெப்ப சலனம் காரணமாக உள்ளுக்குள் தீப்பிடித்திருக்கும். அதனால் புகை வெளியாகிறது, என்று கூறினர்.

பின் அந்த பிளவுபட்ட பூமியிலிருந்து, புகை வருவது நின்று விட்டது. ஆனால், தற்போது, மீண்டும், இதே பகுதியில், பூமி பிளவுபட்டு, புகை வரத் துவங்கி உள்ளது.  கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, இது போலப் புகை வந்து கொண்டிருக்கிறது.

தற்போது புவியியல் துறையினர், இந்தப் பகுதிக்கு நேரில் சென்று, கருப்பு நிறமான மண்ணை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது, நீலகிரி மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வரும் சமயத்தில், இந்தப் புகை தொடர்ந்து வெளியாவது கண்டு, அப்பகுதியில் உள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும், இந்தப் புகையால் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் குறை கூறினர். ஆய்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ooty hill station is there in some thing wrong


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->