பறக்கும்படை குழுக்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு- தேர்தல் அதிகாரி அதிரடி.! - Seithipunal
Seithipunal


நீலகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அருணா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி தொகுதிக்குட்பட்ட ஊட்டி, கூடலூர், குன்னுர் போன்ற தொகுதிகளில் தலா 9 பறக்கும் படை குழுக்கள், 9 நிலைய கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 57 குழுக்கள் இயங்கி வருகிறது. 

இந்நிலையில் தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் அறிவுறுத்தலின்படி, நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின்  செலவினங்களை கண்காணிக்க கூடுதலாக 3 பறக்கும் படை, ஒரு வீடியோ கண்காணிப்பு குழு போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. 

கூடலூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 3 நிலைய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் மொத்தம் 72 கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன குறிப்பிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiri increase flying squads


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->