தமிழகத்தை காப்பாற்ற முதலமைச்சராக இவர் வரவேண்டும்!! தனது ஆசையை வெளியிட்ட முதல்வர்!! - Seithipunal
Seithipunal


ஒட்டப்பிடாரத்தில் திமுக கூட்டணி கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர், "புதுச்சேரி மக்கள் தொகை 16 லட்சம் மட்டும் தான். ஆட்சிக்கு வந்த மோடி சொன்ன திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை.

சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. மோடி ஆட்சியில் பணக்காரர்களுக்கு தான் சலுகை வழங்கப்படுகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நூலுக்கான வரி ரத்து செய்யப்படும். தமிழகத்தில் மோடியின் ஆட்சிதான் நடந்து கொண்டு வருகிறது.

மோடியின் மக்கள் விரோத ஆட்சி 23ம் தேதிக்கு பின்னர் முடிவு கட்டப்படும். மோடியின் தம்பிகள் ஓபிஎஸ் மற்றும் ஜிபிஎஸ் இருவரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். மூன்று ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சி செய்யும் மோடியையும், மாநிலத்தில் கிரண் பேடியும் சமாளித்து நான் ஆட்சி நடத்தி வருகின்றேன்.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு நான் எதிர்ப்பு போராட்டம் நடத்தினேன். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கூறினோம். ஆனால், முதல்வர் தமிழகத்தில் ஏன் எதிர்க்கவில்லை? தமிழகத்தில் ஸ்டாலினால் தான் நல்ல ஆட்சி வழங்க முடியும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி ஒரே வரி ஆக்கப்படும். புதியமுத்தூர் பகுதி சிறிய ஜப்பான் நாடாக தொழில் வளத்தில் வளர்ச்சி பெற்று வருகிறது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரியால் வேலை வாய்ப்பு போய்விட்டது

நரேந்திர மோடி 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஒவ்வொரு வருடத்திற்கும் உருவாக்கப்படும். என மோடி கூறியிருந்தார். அப்படிப் பார்த்தால் 5 ஆண்டுகளில் 10 கோடி இளைஞர்களுக்கு வேலை கிடைத்து இருக்க வேண்டும். ஆனால், 6 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது" என அவர் பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

narayanasamy says about tn politics


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->