சிறையில், உண்ணாவிரதம் இருந்த முருகன், நளினி மருத்துவமனையில் அனுமதி…!  நடைபெறும் அவசர சிகிச்சை….! - Seithipunal
Seithipunal


 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 28 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கிறார்கள் முருகன் மற்றும் அவரது மனைவி நளினி. இவர்களுடன் பேரறிவாளன் உட்பட 7 பேர், வேலுார் சிறையில், உள்ளனர்.

தங்களை விடுவிக்க கோரி, எண்ணற்ற முறை, இவர்கள் சத்தியாகிரகம் செய்தனர். ஜனாதிபதிக்கு மனுச் செய்தனர். இவர்களை விடுதலை செய்ய, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், பரிந்துரை செய்தார்.

ஆனால், மத்திய அரசு இதற்கு சம்மதிக்கவில்லை.

இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சியனரும், இவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ய, அரசாங்கத்திற்கு பல விதமான கோரிக்கைகள் விடுத்தனர். ஆனால், அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

இதனால், விரக்தி அடைந்த முருகன், சிறையிலேயே, கடந்த 14 நாட்களாக உண்ணா விரதம் இருந்து வருகிறார். தன்னைக் கருணைக் கொலை செய்யுமாறு, பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதற்கும் எந்த பதிலும் இல்லை.

அதனால், தன் உயிரை உண்ணா விரதம் இருந்து போக்கிக் கொள்ள முடிவு செய்து, தொடர்ந்து உண்ணா விரதம் இருந்து வருகிறார்.

முருகன் உண்ணா விரதம் இருந்த செய்தியை அறிந்த அவரது மனைவி நளினியும், உண்ணா விரதம் இருக்கத் துவங்கினார். இவர் கடந்த ஒரு வார காலமாக உண்ணா விரதம் இருந்து வருகிறார்.

இதனால், இருவரது உடல் நிலையும் தற்போது மோசமாகி வருகிறது. இவர்களுக்கு வலுக் கட்டாயமாக, குளுக்கோஸ் ஏற்றப் பட்டது. தற்போது, முருகனும், நளினியும், ஆபத்தான நிலையில், வேலுார் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murugan and Nalini admitted in Vellore hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->