தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட முகிலனுக்கு ஆபத்து.?! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறுப்பாளர் முகிலன், இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 ம் தேதி, கரூர் மாவட்டம், சீத்தப்பட்டி காலனி என்ற இடத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில் , இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதற்காக, காவல்துறையினர் அவரை கைது வழக்கு பதிவு செய்தனர். மேலும், கூட்டம் நடந்து எட்டு மாதங்களுக்கு பிறகு காவல்துறையினர், பல்வேறு உள்நோக்கத்துடன் அவரை கைது செய்து அவர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர். தமிழ்நாடு கனிம வள இயற்கையை பாதுகாக்க சட்டத்திற்குட்பட்டும் அரசு, காவல்துறை அனுமதி பெற்றும், உயர்நீதிமன்றம் அனுமதி பெற்றும், நீண்ட நாட்களாக போராடி வரும் நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ் பிரிவினைவாதி என்று தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள, முகிலனுக்கு ஆபத்து இருப்பதாகவும், கொத்தடிமை போல சிறையில் கொடுமை படுத்துவதாகவும்,காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பிலும், சாமானிய மக்கள் கட்சி., மே 17 இயக்கம், ஆதித்தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட உள்ளிட்ட கட்சிகள் கரூரில் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனுக்கள் அளித்தனர்.

இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்த காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான கே.ஆர்.எஸ்.மணியன் கூறுகையில், முகிலன் கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி கரூர் கோர்ட்டிலும் ஆஜர் படுத்திய நிலையில், தற்போது பாளையங்கோட்டை சிறையிலிருந்து, மதுரை சிறைக்கு மாற்றியதோடு, அவருக்கு எந்த ஒரு சுகாதாரமின்றி தண்ணீர் கூட இல்லாமல் கொத்தடிமை போல நடத்துவதாக கூறினார்.
 
மேலும், இச்செய்தியை அறிந்த கரூர் மாவட்டத்தில் உள்ள சமூக நல ஆர்வலர்கள், மற்ற இதர கட்சியினர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்ததோடு மட்டுமல்லாமல், வேண்டுமென்றே பொய் வழக்கு போட்ட காவல்துறையினர் அவரை உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையில், அவரை கொத்தடிமையாக நடத்துவதாகவும் புகார் அளித்தனர். அதுமட்டும் இல்லாமல் ஜனநாயக முறையின் படி நடவடிக்கை எடுக்கும்படியும், தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளருக்கு அவர்கள் அஞ்சல் மூலமாக தங்களது கோரிக்கையை மனுக்களாக அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mukilan arrested in National Security Act


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->