நேரம் குறித்தாகிவிட்டது.. நாளை காலை 10.45 மணி..! வரலாற்றில் முதன்முறையாக நடக்க இருக்கும் நிகழ்ச்சி.!! அனைவரும் தயாராக இருங்கள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த பத்து நாட்களாகவே கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழிக்கின்றன. இதனால் அந்த அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, வினாடிக்கு 1 இலட்சம் கனஅடி என்று உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வந்தது.

124 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 100 அடியை தொட்டு மேலும் உயர்ந்து வருகிறது. கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து சுமார் விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதேபோல கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 65 கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

ஒகேனக்கல்லில் காவிரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.40 இலட்சம் கனஅடியாக நீர் வருவதால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளக்காடாக உள்ளது. ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்கவும்,பரிசல்களை இயக்கவும் 10-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.45 இலட்சம் ஆயிரம் கனஅடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வழக்கமாக மேட்டூர் அணை 90 அடி எட்டிய உடன் திறக்கப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் (16.07.2018) தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 19ஆம் தேதி (நாளை) காவேரி டெல்ட்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறக்க அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், இந்த தண்ணீரை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி மகசூலை அதிகரிக்குமாறு தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், நாளை காலை 10.45 மணியளவில் 85 வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து விடுகிறார். மேட்டூர் அணையின் 85 ஆண்டுகால வரலாற்றில் முதல்வர் பொறுப்பு வகிப்பவர், நீர்திறந்து விடுவது இதுவே முதல்முறையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

METTUR DAM OPEN IN TN CM


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->