ஜாமேன்ரி பாக்சை வைத்து மலையின் உயரத்தை அளக்க முடியுமா..? சாதித்து காட்டிய தமிழர்கள்: சத்தமில்லாமல் படைத்தது வரும் சரித்திரம்..! - Seithipunal
Seithipunal


இதுவரையில் ஆயிரம் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ் கல்வி சேனல் “கலாபாரதி அகடமி சேனல்” எனப்படும் youtube பக்கம்.

தமிழக மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து அடிப்படை சூத்திரங்களையும் நிஜ வாழ்வில் கொண்டுவந்துள்ளனர்.

அனைவருக்கும் கல்வியின் மேல் ஈர்ப்பும் ஆர்வமும் உருவாக வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் சேனல். இதுவாகும்.  80,000 மாணவர்கள் இதுவரை பயன்படுத்தியுள்ளனர்.

இதில் ஒரு பகுதியாக மலையின் உயரத்தை எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி அளக்கும் முறை பற்றி கூறியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் பேசுகையில்,

ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தின் உயரத்தைத்தான் அளப்பதாக முதலில் முடிவு செய்தோம். உயரத்தை அளப்பதற்கு சுற்றிச் சுற்றித் திரிந்த பிறகும் சரியான சமவெளி இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

கிடைத்த ஒரு சமவெளியிலும் எங்கள் எளிய கருவியைப் பொறுத்த முடியவில்லை. சமவெளி இயற்கையின் அழைப்பைக் கழிப்பதற்கான இடமாக இருந்தது.

திரிகோணமிதி முறையினால் எளிய கருவி கொண்டு ( கோணமாணி, நீள் குழாய்) உயரத்தை அளப்பது தான் திட்டம். கணிதத்தின் மேல் உள்ள அச்சம் மாணவர்களுக்கு அடியோடு நீங்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

கூட வந்திருந்த  நண்பர் மருத்துவர் ஜெயபால் அவர்கள் தான் "நாம் கோபால்சாமி மலையின் உயத்தை அளப்போம்" எனக் கூறினார்.

அதன் பின்னர் மலையின் உயரம் வெற்றிகரமாக அளக்கப் பட்டது. எங்களுக்கு புகழும் சந்தோஷமும் ஈட்டிக்கொடுத்த காணொளி இது' என்று ஒரு வீடியோ காட்சியோடு தங்கள் பேச்சை முடித்தனர்.

என்ன என்றே புரியாத சில கணிதத்தை கூட அடிப்படை வாழ்வில் கொண்டு வந்து எளிமையாக்கி வருகின்றனர். நம் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை தவிர்த்து புரிந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்க்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

 


 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Measure HILL height using GEOMETRY BOX


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->