சாதி ஓட்டுக்களை குறிவைக்கும் கனிமொழியின் மாஸ்டர் பிளான்!! எந்த தொகுதியில் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் திமுகவின் மாவட்ட செயலாளர் பெரியசாமி தான் திமுகவின் மிகப்பெரிய தூணாக இருந்து வந்தார். ஆனால், அவரது இறப்பிற்கு பின்னர், அவரளவுக்கு யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மதிமுகவை சேர்ந்த சிலர் தூத்துக்குடி தொகுதி சீட்டுக்காக காத்திருப்பதாக தெரிந்தது. இதில் ஒருவரை விட்டு மற்றொருவருக்கு கொடுத்தால் உட்கட்சி பூசல் வரும் என முடிவு செய்து யாரை நிறுத்தலாம் என யோசிக்கையில் கனிமொழியை களமிறக்க ஸ்டாலின் முடிவு செயிட்டுள்ளார்.

இதற்கு முக்கிய காரணம், தூத்துக்குடியில் உள்ள பெரும்பான்மை சமூக ஓட்டுக்களை குறிவைப்பதே என்கின்றனர் சிலர். காரணம் கனிமொழியின் தாயாரும் அதே சமூகம் என்பதனால் பெரும்பான்மை ஓட்டுக்களை பெற எளிதாக இருக்கும் என நினைத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது என்கின்றனர்.

எனவே, தூத்துக்குடியில் பல்வேறு தொகுதிக்கு சென்று கனிமொழி கிராமசபை கூட்டங்களில் மக்கள் பிரச்சனையை ஆட்சிக்கு வந்தால் தீர்க்கப்படும் என உத்திரவாதம் கொடுத்துவிடுகிறார். 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக MLA கீதாஜீவன் மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் இறங்கி வேலை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்களுக்கு பக்கபலமாக உதயநிதி ஸ்டாலினும் தற்பொழுது களமிறங்கியுள்ளார். கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், விளாத்திகுளம் தொகுதி, நாகலாபுரம் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதியிடம், தூத்துக்குடியில் மற்றொரு பெரும்பான்மை சமூகமான தேவேந்திரகுல சமூக மக்கள், "பள்ளர் உள்ளிட்ட 6 சாதிகளை தேவேந்திர குல வேளாளர் ஒருங்கிணைக்க திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" 

"இம்மானுவேல் சேகரனிற்கு அஞ்சலி செலுத்த திமுகவின் மேல்மட்ட தலைவர்கள் யாரும் செல்வதில்லை. ஆட்சிக்கு வந்தபிறகு இம்மானுவேல் சேகரனுக்கு அரசு விழா எடுப்போம் என தினகரன் சொல்கிறார். இதை ஏன் திமுக சொல்வதில்லை?" எனவும் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

இதற்கு, அம்மக்களை திருப்திபடுத்தும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்தும் நடக்கும் என உறுதியளித்துள்ளார் உதயநிதி. இதனை தொடர்ந்து, "சாலையில் செல்லும் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அது போல தான் தினகரன் வாக்கும்" என கூறியுள்ளார். 

பின்னர் திமுக MLA கீதாஜீவனும் உதயநிதிக்கு ஆதரவாக, " தம்பி உங்களது கோரிக்கையை மேலிடத்திற்கு கொண்டு செல்வார்" என வாக்களித்துள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

master plan of Dmk in thuthukudi batch


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->