குடிநீரால் நேர்ந்த துயரம்.. ஒரு கிராமமே சோகமான பரிதாப பின்னணி..? ஆளும் கட்சியின் அவலநிலை.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் அருகே உள்ள கெப்பிலிங்கம்பட்டியில் சுகாதாரமற்ற குடிநீர்விநியோகம் செய்யப்பட்டது. இதனால்,பலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.

இதையடுத்து, பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டிஒன்றியத்திற்கு உட்பட்டது கெப்பிலிங்கம்பட்டி.

இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி மூலம் குடியிருப்பு பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நீரை பருகிய பலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.

இதனால், பலர் மல்லாங்கிணறு அரசுஆரம்ப சுகாதார நிலையம், விருதுநகர்அரசு தலைமை மருத்துவமனை மற்றும்தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஞ்சித்குமார் கூறியதாவது :

எனது நண்பர் வீடு கெப்பிலிங்கம்பட்டியில் உள்ளது. அவரை பார்ப்பதற்காக சிலநாட்களுக்கு முன்பு அங்கு சென்றேன்.அப்போது, அவர்கள் வீட்டில் தண்ணீர் குடித்தேன். இதையடுத்து, வாந்தியும் பேதியும் ஏற்பட்டது.

இதனால், உடல்மெலிந்து விட்டேன். தற்போது தனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் எனக் கூறினார்.

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முனியசாமி, கிட்னியம்மாள், அறிவழகன், பிரியா ஆகியோரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதேபோல், பாண்டீஸ்வரி, பசுபதி உள்ளிட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ஊர் பொது மக்கள் கூறுகையில், பல நாட்களாக மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை விநியோகம் செய்துள்ளனர். இதனால், அந்த தண்ணீரை குடித்த பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

மேலும், குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கைஎடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக ஊராட்சிப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளைசுத்தம் செய்து, பாதுகாப்பான குடிநீரைபொது மக்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English Summary

many peoples suffered unsafe drinking water


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal