பாதிரியார் இல்லத்தில் சடலமாக கிடந்த அரசு ஊழியர் - கன்னியாகுமரியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள்சந்தை அருகே மைலோடு மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார். அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவர் நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும், மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவையில் முன்னாள் பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருடைய மனைவி ஜெமீலா. இவர் மைலோடு ஆலய நிர்வாகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், தற்போது மைலோடு ஆலய பாதிரியாராக இருந்து வரும் ராபின்சன் தரப்பினருக்கும் இடையே நிர்வாக ரீதியாக அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இரணியல் காவ ல் நிலையத்தில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். 

இதற்கிடையே சேவியர் குமார் பங்கு பேரவை நிர்வாக கணக்கு வழக்குகள் தொடர்பாக அடிக்கடி கேட்டு வந்ததும், இது தொடர்பாக வாட்ஸ் ஆப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் அவர் தற்போதைய பங்கு பேரவை நிர்வாகத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

இதனால், சேவியர் குமாரின் மனைவி ஜெமீலாவை பள்ளி நிர்வாகம் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இந்த நிலையில், ஜெமீலா மீண்டும் பணியில் சேருவதற்காக நேற்று முன்தினம் இரவு தனது உறவினர்கள் சிலருடன் பாதிரியார் ராபின்சனை அவரது இல்லத்தில் சந்தித்து, தனது கணவர் சமூக வலைதளங்களில் பங்கு நிர்வாகத்திற்கு எதிராக பதிவிட மாட்டார் என்றும், மன்னிப்பு வழங்கி ஆசிரியர் பணியை மீண்டும் வழங்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்போது, ராபின்சன் சேவியர் குமார் நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால் வேலை வழங்குவதாக கூறியதையடுத்து வீட்டில் இருந்த சேவியர் குமாரை பாதிரியார் அழைத்து வர சொன்னதாக கூறி வின்சென்ட் என்பவர் நேற்று மதியம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பாதிரியார் ராபின்சன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் சேவியர் குமார் நேற்று இரவு ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்தில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதாக ஜெமீலாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக உறவினர்களுடன் அங்கு சென்று பார்த்த போது சேவியர் குமார் சடலமாக கிடப்பதும், அவர் தலையில் இஸ்திரி பெட்டியால் அடித்த காயம் இருந்ததும் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேவியர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சேவியர் குமாரின் உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died church in kanniyakumari


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->