தந்தை வாங்கிய கடனுக்கு மகளைத் தூக்கிய நிதி நிறுவன ஊழியர் கைது.!! - Seithipunal
Seithipunal


தந்தை வாங்கிய கடனுக்கு மகளைத் தூக்கிய நிதிநிறுவன ஊழியர் கைது.!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மருதூரைச் சேர்ந்தவர் வனத்துராஜா. இவர், கீரனூரில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடந்த ஆண்டு 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்தக் கடனை மாதம் தோறும் 2,500 ரூபாய் வீதம் தவணை முறையில் திருப்பிச் செலுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், ராஜாவால் ஜூன் மாதத்துக்கான தவணை தொகையை செலுத்த முடியவில்லை. அதனால், பணத்தை வசூலிப்பதற்காக நிதி நிறுவன ஊழியர் விக்னேஷ் நேற்று வனத்துராஜாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் வனத்துராஜாவின் 11 வயது மகள் ஜனனி மட்டும் இருந்துள்ளார். 

இதைத்தொடர்ந்து விக்னேஷ் ஜனனியிடம் வனத்துராஜா குறித்து விசாரித்து விட்டு, அவரை அலுவலகத்திற்கு தூக்கிச் சென்றுவிட்டார். இதையடுத்து, வீட்டிற்கு வந்த வனத்துராஜா வீட்டில் மகள் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

அப்போது, அவரிடம் செல்போனில் பேசிய விக்னேஷ், தவணை தொகையை கட்டினால் தான் உங்கள் மகளை விடுவிப்போம் என்று கூறியுள்ளார். இதைகேட்டு  அதிர்ச்சியடைந்த வனத்துராஜா சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். 

அதன் படி, போலீசார் நிதி நிறுவனத்துக்கு சென்று அங்கிருந்த சிறுமியை மீட்டு வனத்துராஜாவிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kidnape girl in putukottai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->