முகநூலில் தமிழக அரசு குறித்து அவதூறு பதிவிட்ட நபர் கைது.! - Seithipunal
Seithipunal


முகநூலில் தமிழக அரசு குறித்து அவதூறு பதிவிட்ட நபர் கைது.!

மதுரையில் சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை, கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் சமூகவலைதள பிரிவு ஒன்று தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவின் மூலம் பல்வேறு குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், முகநூல் பக்கத்தில் தமிழக அரசுக்கு எதிராக, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார். 

இது தொடர்பாக, மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை தேடி வந்தனர். இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது, "சமூக வலைதளங்கள் மூலமாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் மற்றும் தவறான கருத்துகளை பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுத் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for defaming tn govt on facebook


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->