கன்னியாகுமரியில் இன்று உள்ளூர் விடுமுறை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரக்கூடிய சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி அனைத்து சிவாலயங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 

இந்த அற்புத நாளின் இரவு நேரத்தில் நான்கு ஜாம அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை உள்ளிட்டவை செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மஹா சிவராத்திரி இன்று (மார்ச் 8) பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. 

இந்த விழாவை முன்னிட்டு சிவாலயங்களில் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடத்தப்படும். இதன் காரணமாக  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

local holiday in kanniyakumari district for maha sivarathiri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->