நம் முன்னோர்கள் பின்பற்றிய மரபைப் பற்றிக் கூறும் இலக்கிய நூல்கள்! அவசியம் படிக்க வேண்டிய நூல்!! - Seithipunal
Seithipunal


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, சங்க காலத்தில், நடைமுறையில் இருந்த சில பழக்க வழக்கங்கள் தான் தற்போதும், பின்பற்றப் படுகின்றன.
    
அவற்றை, சங்க கால அக நுாற்களான சில இலக்கியங்கள் இயம்புகின்றன.
    
மதுரைக் கண்ணன் கூத்தனார், என்ற ஆசிரியர் எழுதிய,  “கார் நாற்பது” என்ற இலக்கிய நுாலை எழுதி உள்ளார். இந்த இலக்கியத்தில் 40 வெண்பாக்கள் உள்ளன.
    
“பொருள் ஈட்டுவதற்காகச் சென்ற தலைவன், கார் காலம் வரும் சமயம் வருவேன், என்று தலைவியிடம் உறுதி அளித்தான். தலைவியும், தலைவன் வருவான், என்று ஆவலோடு காத்திருக்கிறாள்.
    
கார் காலமும் வந்தது. ஆனால், தலைவன் வரவில்லை. கார் காலத்தில் இடி இடிக்கும் வானத்தைப் பார்த்து, “என் தலைவன் வரட்டும், உன்னைச் சொல்கிறேன், என்று ஊடலுடன், மின்னலை ஏசுகிறாள்.
    
இதைக் கண்டு, தலைவியின் தோழி, தலைவியைப் பார்த்து, “கார் காலம் வந்து விட்டது. நிச்சயம், உன் தலைவன், உன்னை நாடி ஓடி வந்து விடுவார், என்று ஆறுதல் கூறுகிறாள். அத்துடன் இந்த கார் நாற்பது காவியம் முடிவடைகிறது.
    
இந்தக் கார் நாற்பது இலக்கியத்தில், அந்தக் காலத்திலேயே, மார்கழி மாதத்தில், பெண்கள் விளக்கேற்றும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள், என்ற செய்தியை அறிய முடிகிறது.
    
மாயோனையும், பலராமனையும், வேள்வித் தீயையும், சங்க கால மக்கள், தெய்வமாகப் போற்றிய வரலாற்றையும், படித்து உணர முடிகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

literary tests about the tradition followed by our ancestors


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->