எதிர்பார்த்ததை விட பயங்கரமாக உள்ளது, திணறும் அதிகாரிகள்..!! என்னவெல்லாம் நடக்க போகிறதோ..? ஏன் விலையை உயர்த்தினோம் என சிந்திக்கும் அளவிற்கு.., - Seithipunal
Seithipunal


போக்குவரத்துக் கட்டண உயர்வு தமிழகத்தில் கடும் எதிரொளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பல கல்லூரிகள் கட்டண உயர்வை திரும்பப் பெற  வலியுறுத்தி, போராட்டம் நடத்த, தற்போது கோவை, அரசுக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்

100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

இதையடுத்து, மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தின்போது, கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

 போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில்,

பேருந்துக் கட்டண உயர்வால் பணக்காரர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை..

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது சம்பளத்தில் பாதியைத் தினமும் 100 ரூபாய் வீதம் பேருந்துக்கு செலவு செய்ய வேண்டி இருக்கு..

மேலும், அரசு இலவசம் கொடுப்பதற்குப் பதிலாக, வேலை கொடுத்தால் எந்த பிரச்சனையும் இருக்காது.

எங்களுக்கு ஸ்கூட்டி எல்லாம் வேண்டாம். இளைய தலைமுறைக்கு இப்போது இன்றியமையாத ஒன்று வேலைதான்..

வேலைக்குச் செல்லும் பலர் இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர் என்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai student protest against bus fare increasekovai student protest against bus fare increase


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->