எனது குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை... - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சென்னையில் பலரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. 

இதனால் பலரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாமல் வீடு திரும்பினர். வாக்கு பதிவு சதவீத குளறுபடி, தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. 

என்னுடைய குடும்பத்திலேயே பலருக்கும் ஓட்டு இல்லை, வெறுப்பு அரசியல் மத துவேச பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமர் நரேந்திர மோடியின் மத துவேச பேச்சுகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சசிகலா எழுதியதாக சொல்லப்படும் கடிதம் வெற்று கடிதம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar says my family members not vote


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->